சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை அய்யாவு காலனியில் ஸ்ரீதர்(28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீதருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விஜயலட்சுமி தனது கணவரை கண்டித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் விஜயலட்சுமி தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று விஜயலட்சுமி அமைந்தகரை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது ஸ்ரீதர் அங்கு சென்று விஜயலட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து விஜயலட்சுமி அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஸ்ரீதரை கைது செய்தனர்.