Categories
உலக செய்திகள்

3000 இந்தியர்களுக்கு கிரீன் விசா வழங்க முடிவு… இங்கிலாந்து வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இங்கிலாந்து அரசு வருடந்தோறும் மூன்றாயிரம் இந்திய மக்களுக்கு கிரீன் விசா அளிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தோனேசிய நாட்டில் ஜி-20 உச்சி மாநாடானது நேற்று தொடங்கியிருக்கிறது. இதில் சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட 19 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில், இந்தோனேசிய பிரதமரின்  அழைப்பில் பேரில் பிரதமர் மோடி பங்கேற்றிருக்கிறார்.

அங்கு இங்கிலாந்து பிரதமரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கும், மோடியும்  பேசியுள்ளனர். அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் ரிஷி சுனக், வருடந்தோறும் 3000 இந்திய மக்களுக்கு கிரீன் விசா வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி பட்டப்படிப்பை நிறைவு செய்த 30 வயதுடையவர்கள் வரை, இந்த விசாவை வாங்கி இரண்டு வருடங்கள் வரை இங்கிலாந்து நாட்டில் பணிபுரிய முடியும் என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |