Categories
சினிமா தமிழ் சினிமா

அட! என்னப்பா இதெல்லாம்…. யுவனைத் திட்டிய பிரதீப்..‌‌.. வைரலாகும் முகநூல் பதிவு…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…..!!!!!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சிலம்பரசன் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனின் பழைய முகநூல் பதிவை வைத்து தற்போது நெட்டிசன்கள் அவரை விளாசி வருகிறார்கள். அதாவது லவ் டுடே படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார். ஆனால் கடந்த 2010-ம் ஆண்டு யுவன் சங்கர் ராஜாவை திட்டி ஒரு முகநூல் பதிவை வெளியிட்டுள்ளார் பிரதீப்.

அந்த பதிவில் யுவன்‌ Waste மற்றும் fraud என்று இருக்கிறது. இதேபோன்று கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனியையும் விமர்சித்து பிரதீப் பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பதிவுகளை பார்த்த நெட்டிசன் பலரும் தற்போது பிரதீப் ரங்க நாதனை விளாசி வருகிறார்கள்.

Categories

Tech |