Categories
அரசியல் மாநில செய்திகள்

நீ தமிழனா… தமிழா… இந்துவா… முஸ்லீமா…. இப்படி கேட்பது தேவையற்றது – அன்புமணி சுளீர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  2026-இல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் நாங்கள் ஆட்சி அமைப்போம், அதற்கு ஏற்ப வியூகங்களை நாங்கள் 2024-ல் அமைப்போம். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அமைதியாக நல்லபடியாக நடத்தி இருந்தால் நல்லா இருந்திருக்கும். நிறைய விளம்பரப்படுத்தி, இன்னும் கொஞ்சம் விளம்பரம் குறைத்து இருக்கலாம்.

தமிழ்நாட்டில் ஆஃப்லைன் என்னவென்றால், பல கேள்விகள் பல கட்சிகள் கேட்கிறது. ஒரு கட்சி வந்து நீங்கள் தமிழனா என்று கேட்கிறது ? நீங்கள் தமிழா இல்ல ? தமிழனா என்று கேட்கிறது ?  இன்னொரு கட்சி நீங்கள் இந்துவா என்று கேட்கிறது ? இன்னொரு கட்சியின் முஸ்லிமா என்று கேட்கிறது ? இன்னொரு கட்சி திராவிடனா என்று கேட்கிறது ?  இப்போது இருக்கின்ற சூழலில் இது போன்ற கேள்விகள் தேவையில்லை.

இந்த மாதிரி கேள்விகள் கேட்காதீர்கள். விவசாயிகளுக்கு உங்களுடைய விளைபொருள் வந்து கிடைத்திருக்கிறதா ? அல்லது நெல் மூட்டைக்கு விலை கிடைத்திருக்கிறதா ? என்று கேளுங்கள், இளைஞர்கள் உங்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிறார்களா ?  கிடைத்திருக்கிறதா? என்று கேளுங்கள், உங்கள் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் வருகிறார்களா? என்று கேளுங்கள். இது சார்ந்து கேள்விகள் கேளுங்கள். ஏன் பிரிவினையை உருவாக்குகிறீர்கள், அதுவும் தேவையில்லை, தேவையில்லாத சூழ்நிலை. மக்களை இணைக்க பாருங்கள். உங்கள் அரசியல்காக பிரிக்க பார்க்காதீர்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |