காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மந்தநாயக்கன்பட்டி கிராமத்தில் நாகமுத்து(22) என்பவர் வ வருகிறார். இவர் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் காயத்ரி(20) என்ற பெண்ணும் நாகமுத்துவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் இரு விட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போது உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் உங்களை விருப்பப்படி பாதுகாப்பாக வாழலாம் என கூறி போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.