Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நானும் இங்கு தான் படிக்கிறேன்” ஐ.ஐ.டி மாணவியிடம் ரகளை செய்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஐ.ஐ.டி விடுதியில் தங்கி படிக்கும் மாணவி நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் அந்த மாணவியிடம் மோட்டார் சைக்கிளில் பின்னால் ஏறி உட்காரும்படி வற்புறுத்தியுள்ளார். மேலும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. அப்போது மாணவி அவரை கண்டித்ததால் தானும் அதே ஐ.ஐ.டி-யில் படிக்கும் மாணவர் எனக்கூறி ரகளை செய்துள்ளார். இதுகுறித்து காவலாளியிடம் மாணவி தெரிவித்துள்ளார். பின்னர் காவலாளி அந்த வாலிபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவம் குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் வசந்த் எட்வர்ட்(34) என்பவர் மாணவியிடம் ரகளை செய்தது தெரியவந்தது. இவர் ஐ.ஐ.டி வளாகத்தில் இருக்கும் உணவகத்தில் முன்பு ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த பழக்கத்தில் அடிக்கடி ஐ.ஐ.டி வளாகத்திற்கு வசந்த் வந்து செல்வது வழக்கம். அப்படி வரும்போது தனிமையில் சென்ற மாணவியிடம் வசந்த் ரகளை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |