இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையேயான மோதல் நீண்ட காலங்களாக நீடித்து வருகின்றது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பகுதிகளான மேற்கு கரை மற்றும் ஜெருசலேம் நகரில் பாலஸ்தீன பயங்கரவாதிகள் இஸ்ரேலியர்களை குறி வைத்து தாக்குதல் நடத்துகின்றனர். அதற்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் ராணுவ வீரர்களும் பாலஸ்தீன அகதிகள் முகாமிற்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவம் வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேலின் மேற்கு கரை பகுதியில் உள்ள ஏரியல் நகரில் வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் கேஸ் நிலையத்திற்கு அருகில் இஸ்ரேலியர்கள் நின்று கொண்டிருந்த போது பாலஸ்தீன வாலிபர் ஒருவர் கத்தியால் சாராமரியாக குத்தியுள்ளார்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் காயமடைந்த மூன்று பேரையும் மருத்துவமனையில் அனுமதித்க்கபட்ட நிலையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட பாலஸ்தீன வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்ததால் இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் அவரை சுட்டுக் கொன்றுள்ளார்.