Categories
தேசிய செய்திகள்

“புதுச்சேரிக்கு இடம் தர மறுக்கிறார்கள்”…. தமிழக அரசை குற்றம்சாட்டிய கவர்னர் தமிழசை….!!!

புதுச்சேரி அரசு மருத்துவமனை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று மருத்துவமனையில் கவர்னர் தமிழிசை தலைமையில் நடைபெற்றது‌. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து துறை தலைவர்களும், தங்கள் துறைகளுக்கு தேவையான கருவிகள், எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளது, சிறப்பு மருத்துவர்கள் எத்தனை பேர் வேண்டும் என அறிக்கை கொடுத்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 11 சிகிச்சை அரங்கங்கள் தயாராக இருந்தும் பயன்படுத்தாமல் உள்ளது. இன்னும் 6 மாதத்தில் அறுவை சிகிச்சை அரகங்கள் முழு வீச்சில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

அதனை தொடர்ந்து சிறப்பு மருத்துவர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதற்காக வீதிகளை தளர்த்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுப்பதாக விளம்பரம் செய்யப்பட உள்ளது. இதனையடுத்து விமான நிலைய விரிவாகத்திற்கு தமிழக அரசு இடம் வழங்கவில்லை. விலை கொடுத்தே இடத்தை வாங்க வேண்டும் என்கிறார்கள். விமான நிலைய விரிவாக்கம் என்பது புதுச்சேரிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கு அது பயனுள்ளதாக இருக்கும். எனவே விமான விரிவாக்கத்திற்கு தமிழக அரசு இலவசமாக இடத்தை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |