Categories
அரசியல்

சபரிமலை கோவில் நடை திறப்பு…. பக்தர்களுக்கு எப்போது அனுமதி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

சபரிமலை கோவில் நடையானது நேற்று மாலை திறக்கப்பட்டது. இதையடுத்து இன்று(நவ..17) அதிகாலை மண்டலகாலம் ஆரம்பமானது. 4 வருடங்களுக்கு பிறகு சபரிமலை முழுமையான சீசனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. கார்த்திகை 1ஆம் தேதி முதல் 41 நாட்கள் நடைபெறும் பூஜை மண்டல காலம் ஆகும். இந்த வருடம் சீசனுக்காக நேற்று மாலை 5.00 மணிக்கு நடை  திறக்கப்பட்டது. அதன்பின் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார்.

அதன்பின் இருமுடி கட்டிக்கொண்டு பதினெட்டுப் படிகள் ஏறி வரும் “வெர்ச்சுவல் க்யூ” வாயிலாக முன்பதிவு செய்த பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கி தரிசன அனுமதி தொடங்கியது. அடுத்து 18ம் படிகள் வழியாக வந்து ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்த பிறகு புது மேல்சாந்திகள் சபரிமலை ஜெரயாமன் நம்பூதிரி, மாளிகைப்புறம் ஹரிகரன் நம்பூதிரி போன்றோரை அழைத்து ஸ்ரீ கோயில் முன்புறம் வந்ததும் அவர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கினார்.

பிறகு மாலை 6:00 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு இவர்களுக்கு அபிேஷகம் நடத்தி முறைப்படி ஸ்ரீகோவிலுக்குள் அழைத்து சென்றார். அதனை தொடர்ந்து நேற்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பின் 17ஆம் தேதி இன்று அதிகாலை 4:00 மணிக்கு புதிய மேல்சாந்தி ஜெய ராமன் நம்பூதிரி நடை திறந்து விளக்கில் தீபம் ஏற்றியதும் இந்த வருடத்துக்கான மண்டல காலம் ஆரம்பமானது. அத்துடன் நெய் அபிஷகம் உள்ளிட்ட பூஜைகள் துவங்கும்.

Categories

Tech |