Categories
தேசிய செய்திகள்

சபரிமலை கோவில்: எந்த நாட்களில் என்னென்ன சிறப்பு பூஜைகள்?…. இதோ முழு விபரம்….!!!!

சபரிமலை கோயிலில் நடப்பு மண்டல – மகரவிளக்கு சீசன் முதல் 2023 ஆம் வருடம் மண்டல சீசன் வரையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாட்கள் விவரம் பற்றி தெரிந்துகொள்வோம்.

# மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலில் இன்று (நவ..16) மாலை நடை திறக்கப்படுகிறது. அடுத்தமாதம் 27-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற இருக்கிறது.

# மகரவிளக்கு பூஜைக்காக டிச..30ஆம் தேதி நடை திறக்கப்படும். அடுத்த வருடம் (2023) ஜனவரி 14-ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும். அடுத்து 20ம் தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பிறகு கோயில் நடை அடைக்கப்படும்.

# அதன்பின் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 5 தினங்கள் பூஜைக்கு பிறகு 17-ஆம் தேதி அடைக்கப்படும். பங்குனிமாத பூஜைக்காக மார்ச் 14ஆம் தேதி நடைதிறக்கப்பட்டு 19-ம் தேதி அடைக்கப்படும்.

# அதனைத் தொடர்ந்து பங்குனி ஆராட்டு விழாவையொட்டி மார்ச் 26ம் தேதி நடை திறக்கப்படும். 27-ம் தேதி காலை 9 மணிக்கு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கும். ஏப்ரல் 5ஆம் தேதி ஆராட்டுடன் விழா நிறைவுபெறும். சித்திரைமாத பூஜைக்காக ஏப்ரல் 11-ஆம் தேதி நடை திறக்கப்படும். 15-ஆம் தேதி விஷு பண்டிகை சிறப்புபூஜை நடைபெறும். பின் 19ஆம் தேதி நடை அடைக்கப்படும்.

# வைகாசிமாத பூஜைக்காக மே மாதம் 14-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, 19-ந்தேதி அடைக்கப்படும்

# பிரதிஷ்டை தினத்தையொட்டி மே 29-ஆம் தேதி நடை திறக்கப்படும். 30-ஆம் தேதி பிரதிஷ்டை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

# ஆனிமாத பூஜைக்காக ஜூன் 15-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 20-ஆம் தேதி அடைக்கப்படும்.

# ஆடிமாத பூஜைக்காக ஜூலை 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 21ம் தேதி அடைக்கப்படும். பின் ஆவணிமாத பூஜைக்காக ஆகஸ்டு 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 21-ம் தேதி அடைக்கப்படும்.

# ஒணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக ஆக.. 27ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 31ம் தேதி அடைக்கப்படும்.

# புரட்டாசிமாத பூஜைக்காக செப்டம்பர் 17-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 22-ம்தேதி அடைக்கப்படும்.

# ஐப்பசிமாத பூஜைக்காக அக்..17-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 22 ஆம் தேதி அடைக்கப்படும்.

# சித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி நடை திறக்கப்படும். 11-ம் தேதி சிறப்பு பூஜைகளுக்கு பிறகு நடை அடைக்கப்படும்.

அதனை தொடர்ந்து 2023-ம் வருடத்துக்கான மண்டல சீசன் நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கிநடைபெறும்.

Categories

Tech |