நீங்கள் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்து நல்ல வருமானத்தை பெற விரும்பினால், தபால் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) திட்டம் ஒரு நல்ல தேர்வு ஆகும். இத்திட்டத்தில் நீங்கள் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்தாலும் பெரிய லாபத்தைப் பெறலாம். இந்த திட்டம் பாதுகாப்பு மற்றும் நிதிச்சேமிப்பை அளிக்கிறது. இந்திய குடிமகன்கள் அனைவரும் தபால் அலுவலக கிளை (அ) வங்கியிலும் கணக்கைத் தொடங்கலாம்.
குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களது பெற்றோர் (அ) பாதுகாவலர்கள் கணக்கைத் திறக்கலாம். அதே நேரம் தபால் அலுவலக பிபிஎஃப் திட்டத்தில் கூட்டுக் கணக்கை திறக்க முடியாது. இத்திட்டம் 15 வருட முதிர்வுகாலத்துடன் கிடைக்கிறது. எனினும் முதலீட்டாளர்கள் விருப்பத்தின் பெயரில் இதனை நீட்டித்துக்கொள்ளலாம்.
இதற்கிடையில் முதலீட்டாளர்களுக்கு தொடக்கத்தில் முதலீடு செய்யப்பட்ட விகிதத்தில் நிலையான வருமானமானது வழங்கப்படுகிறது. மாதந்தோறும் ரூபாய்.12,500 (அ) நாளொன்றுக்கு ரூ.417 என்று 15 வருடங்கள் (அ) முதிர்வு வரையிலும் முதலீடு செய்தால் உங்களது மொத்த தொகை ரூ.22.50 லட்சமாக இருக்கும். வருடத்திற்கு 7.1% கூட்டு வட்டி விகிதத்தில் லாபம் கிடைக்கும். வட்டி ரூபாய். 18.18 லட்சம் சேர்த்து மொத்தமாக உங்களுக்கு ரூபாய்.40.68 லட்சம் வருமானம் கிடைக்கும்.