கேரளாவை சேர்ந்தவர் விஷ்ணு (34). இவர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் தனியாக வீடு திரும்பும் பெண்களை குறி வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்படி தனியாக செல்லும் பெண்கள் பின்னாலே சென்று திடீரென்று தன்னுடைய வேட்டியை அவர்களின் முகத்தில் போட்டு மூடி விட்டு பாலியல் சீண்டாலில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் பாலியல் சீண்டல் முடிந்ததும் கண்ணிமைக்கும் நொடியில் மறைந்து விடுவாராம். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஷ்ணுவை கைது செய்துள்ளனர். மேலும் இதே போல் அவர் வேறு பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.