அம்மை நோய்க்கு 1 வயது குழந்தை பலியாகியுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் உள்ள நல் பஜார் பகுதியில் வசித்து வந்த ஒரு தம்பதியினரின் 1 வயது குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அந்த குழந்தைக்கு கடுமையான நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சுவாச கோளாறுகளை உண்டாக்கியது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை வென்டிலேட்டரில் 2 நாட்களாக வைக்கப்பட்டிருந்த குழந்தை நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து மருத்துவர் மங்களா கோமரே கூறியதாவது. குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் குழந்தை 10 கிலோ எடை இருந்தது என குடும்பத்தினர் கூறினர்.
ஆனால் குழந்தைக்கு அம்மை நோய் ஏற்பட்டு அதன் காரணமாக குழந்தை உயிரிழந்தது. இந்நிலையில் அம்மை நிம்மோனியாவுடன் கூடிய செப்டிசீமியா எனப்படும் பாக்டீரியாவால் ரத்தத்தில் விஷம் கலந்து குழந்தை உயிரிழந்தது என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த மருத்துவமனையில் அம்மை பாதிப்புக்காக ஐ.சி.யூ. வில் 4 நோயாளிகள் உள்ளனர். மேலும் 61 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் 4 பேருக்கு பிராணவாயு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் மும்பையில் பாதிப்புள்ள 617 பேர் இருக்கின்றனர். அவர்களில் 109 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.