தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களை சீரமைக்கவும், தேவையான புத்தகங்களை வாங்கவும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 84 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் முதல் கட்டமாக 2021-2022 ஆம் ஆண்டில் 416 நூலகங்களை சீரமைக்க 91 .75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதேபோல் தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள நூலகங்கள் அனைத்தும் வருகின்ற 2024-ஆம் ஆண்டுக்குள் சீரமைக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.