கால்பந்து வீராங்கனையான பிரியாவின் உயிரிழப்பு பற்றி பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை கொளத்தூர் அரசு மருத்துவமனையில் மூட்டு சவ்வு கிழிந்ததற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா அடுத்தடுத்து ஏற்பட்ட உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்நிலையில் பிரியாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி விசாரணை நடத்தி தவறு இருந்தால் டாக்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்த 10 ரூபாய் லட்சம் இழப்பீடு பிரியாவின் குடும்பத்தினருக்கு போதுமானதாக இல்லை எனவே ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Categories
கால்பந்து வீராங்கனை மறைவு… “இழப்பீடு போதுமானதல்ல”..? அன்புமணி ராமதாஸ் இரங்கல்…!!!!!
