Categories
தேசிய செய்திகள்

இனி இந்த விதிகளில் தேவையான திருத்தம் செய்ய…. பல்கலைக்கழகங்களை அறிவுறுத்தும் யுஜிசி…..!!!!

தொழில்நிபுணா்களை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களில் பேராசிரியா்களாக நியமனம் செய்யும் அடிப்படையில் விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு (அ) அவசரச்சட்டம் நிறைவேற்றுமாறு பல்கலைக்கழகங்களை, யுஜிசி அறிவுறுத்தி இருக்கிறது. உயா் கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் தொழில்திறனை மேம்படுத்தும் வகையில் அமெரிக்காவின் எம்ஐடி கல்விநிறுவனம், ஹாா்வாா்ட் பல்கலைக்கழகம், ஸ்டான்போா்ட் பல்கலைக்கழகம் ஆகிய உலகின் தலைசிறந்த உயா்கல்வி நிறுவனங்கள் உரிய கல்வித்தகுதி இல்லாத ஆனால், தொழில்நிறுவனங்களில் தலைசிறந்து திகழும் அனுபவமிக்க நிபுணா்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேராசிரியா்களாக நியமிக்கிறது.

இந்த நடைமுறையினை தில்லி, சென்னை, குவாஹாட்டி ஐஐடி கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்கிறது. அதேபோல் மற்ற உயா்கல்வி நிறுவனங்களும் தலை சிறந்த நிபுணா்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேராசிரியா்களாக நியமனம் செய்ய சமீபத்தில் அறிவுறுத்திய யுஜிசி, அதற்குரிய வழிகாட்டுதலையும் வெளியிட்டது. அந்த வகையில் உயா் கல்வி நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பேராசிரியா் பணி இடங்களில் 10%க்கு மிகாமல் நிபுணா்களை பேராசிரியா்களாக நியமித்துக்கொள்ளுமாறும், அவா்களுடைய பணிக்காலம் 3 வருடங்களுக்கு மிகக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டது.

அதன்படி நியமிக்கப்படுபவா்களுக்கு பேராசிரியருக்கான உரிய கல்வித்தகுதி கட்டாயம் அல்ல. இப்போது இதற்கேற்ற அடிப்படையில் விதிகளில் உரியதிருத்தம் செய்யும்படி அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி செயலா் பி.கே.தாக்குா் எழுதியுள்ள கடிதத்தில் இருப்பதாவது “பயிற்சியின் பேராசிரியா் எனும் பெயரில் தொழிலக நிபுணா்களை பேராசிரியா்களாக நியமனம் செய்வதற்கேற்ப விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு (அ) அவசரச்சட்டம் நிறைவேற்றுமாறு பல்கலைக்கழக துணைவேந்தா்களும், கல்லூரி முதல்வா்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்” என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

Categories

Tech |