இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனில் அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இந்த குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக நாடு முழுவதும் ஏக்லவியா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது 392 மாதிரி பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், 1.05 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில் 20000 ST வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ஏக்லவ்யா பள்ளிகளை அமைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 740 ஏக்லவ்யா பள்ளிகளை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த பள்ளிகளில் 3.5 லட்சம் மாணவர்கள் சேர்ந்து கல்வி பயில வேண்டும் என்பது அரசின் இலக்கு ஆகும். மேலும் இந்த தகவலை பழங்குடியின அமைச்சர் ஜான் ஜாதியா கௌரவ் தெரிவித்துள்ளார்