கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 முதல் நிலை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்வு கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 11 மணிக்கு நடத்தப்பட உள்ளது. தேர்வு எழுத விருப்பம் இருப்பவர்கள் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதல் நிலை தேர்வின் ஹால் டிக்கெட் நகலுடன் மாதிரி தேர்வில் கலந்து கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை 04142-290039, 9499055908 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.