Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…… காதலியை 35 தூண்டுகளாக வெட்டிய‌ காதலன்…. நாட்டையே உலுக்கிய சம்பவம்….!!!!

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மாணிக்பூர் என்ற இடத்தில் விகாஸ் என்பவர் ரசித்து வருகிறார். இவரின் மகள் ஷ்ரத்தா(26). இவர் மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் பணிபுரிந்து வந்தார். அப்போது உடன் வேலை பார்த்த அப்துல் அமீன் பூனாவாலா என்ற வாலிபருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. அந்த காதலை ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்த்தனர். இதனையடுத்து காதல் ஜோடி டெல்லிக்கு இடம் மாறினர். அங்கு மெக்ருவி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்தனர். மும்பையில் உள்ள பெற்றோருடன் ஷ்ரத்தார் பேசி வந்தார். இந்நிலையில் கடந்த மே மாதத்திலிருந்து ஷ்ரத்தாவே அவருடைய பெற்றோரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் தந்தை கடந்த வாரம் டெல்லி வந்தார். அப்போது ஷ்ரத்தா தங்கியிருந்த வீட்டுக்கு சென்ற போது பூட்டி கிடந்தது. அதனை தொடர்ந்து அருகில் உள்ள போலீசில் புகார் அளித்தார்‌.

அந்த புகாரின் படி போலீசார் ஷ்ரத்தாவின் காதலன் அப்தாப்பை பிடித்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது கடந்த மே மாதம் 18ஆம் தேதி ஷ்ரத்தா திருமணம் செய்யுமாறு தொந்தரவு செய்தார். இதனால் ஆத்திரத்தில் அவரின் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டதாக தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அதை குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார். அவற்றை பாலிதீன் பையில் எடுத்துச் சென்று அருகில் உள்ள காட்டுப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் வீசி உள்ளார். 18 நாட்களாக அவர் இவ்வாறு செய்துள்ளார். அதுவரை அக்கம் பக்கத்தினருக்கு ஏதும் தெரியாமல் இருக்க வீட்டில் ஊதுபத்தி கொளுத்தியுள்ளார். ஆனால் ஆறு மாதங்களுக்கு பிறகு போலீசில் அவர் சிக்கி உள்ளார். தற்போது போலீசாருக்கு சில உடல் பாகங்களே கிடைத்துள்ளது. சிலவற்றை தெரு நாய்கள் தின்று இருக்கலாம். மற்ற பாகங்களையும், வெட்டுவதற்கு பயன்படுத்திய கத்தியையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லி மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது.

Categories

Tech |