நாடு முழுதும் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி இருக்கிறது. அதாவது, மத்திய அரசானது விரைவில் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்த திட்டமிட்டு இருக்கிறது. ஏ.ஐ.சி.பி.ஐ குறியீட்டின் புது புள்ளி விவரங்களை பார்த்தால் 2023ம் வருடத்தில் முதல் மாதத்திலேயே ஊழியர்களின் அகவிலைப்படி நல்ல அளவில் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த உயர்வானது ஜனவரி மாதத்தில் நிகழ வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் ஜனவரி மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 % உயர்த்தப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38 % வழங்கப்படுகிறது. இது 42% வரை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.