நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்ற பண்டிட் ஜவகர்லால் நேருவின் பிறந்ததினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது பிறந்ததினம், குழந்தைகள்தினம் ஆகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்கு வங்காளத்தில் நியூ ஜல்பைகுரி மற்றும் டார்ஜிலிங் இடையில் டாய் டிரெயின் எனப்படும் மலை ரயில் இயக்கப்படுகிறது. குழந்தைகள் தினத்தில் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் அடிப்படையில் இந்த ரயிலில் அவர்களை தன்னார்வ தொண்டு அமைப்பு பயணம் செய்ய வைத்து மகிழ்வித்துள்ளது.
இது தொடர்பாக சிலிகுரி நகரிலுள்ள தன்னார்வ அமைப்பின் நிறுவனர் சக்திபால் கூறியதாவது, குழந்தைகள் தினத்தில் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு ஏதேனும் செய்து மகிழ்விக்க வேண்டும் என்று நாங்கள் முயற்சி மேற்கொண்டோம். இதனால் பாரம்பரிய மலை ரயிலில் அவர்களை பயணம் மேற்கொள்ள வைத்தோம். இந்த மலை ரயில் பயணம் அழகாக இருந்தது. இதன் காரணமாக குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர் என கூறியுள்ளார்.