மிசோரமில் நத்தியால் மாவட்டத்தில் மவுதார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த குவாரியில் பலரும் வேலை செய்து வரும் நிலையில், பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென குவாரியில் கற்கள் அதிக அளவில் சரிந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் 12 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் இன்று காலை அந்த பகுதிக்குச் சென்று மீட்பு பணியை தொடங்கினர்.
இரண்டு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய அந்த குழு இதுவரை விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்களின் உடல்களை மீட்ட நிலையில் இன்னும் நான்கு தொழிலாளர்களை காணவில்லை . அவர்களின் உடலை மீட்கும் பணியில் தீவிரமாக மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.