ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த 7 தமிழர்களும் விடுதலை ஆகியுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவாகரத்தில் காங்கிரஸ் பக்கம் நின்று பாஜகவும் விமர்சித்து வருகிறது. இந்நிலையில் ஹெச்.ராஜா ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியில் வரவேண்டும். அவர்கள் விடுதலை எங்களுக்கு ஏற்புடையது அல்ல. இந்தி திணிப்பில் ஒன்றிய அரசு ஈடுபடாது என்றும் தமிழக அரசு தமிழைக் காக்க தவறிவிட்டது.
அதனை தொடர்ந்து தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி ஆங்கிலத்திற்கு பிறகு ஏதாவது ஒரு இந்திய மொழி என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த காலத்திலும் இந்தி திணிப்பு என்பது இருக்காது. கடந்த 55 ஆண்டு திராவிட ஆட்சியில் தமிழ் அழிந்து வருகிறது. தமிழக திராவிட கட்சிகள் இரு மொழிக் கொள்கை என்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் மாற்றுமொழியை அடிப்படையாகக் கொண்டு, 560 பள்ளிகள் இயங்கி வருகிறது. இதனையடுத்து பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ரூ.3 உயர்த்தி விட்டு பால் விற்பனை விலை ரூ.12 உயர்த்தியுள்ளனர். இதனால் டீ விலை ரூ15 ஆக உயர்ந்துள்ளது. இது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயல். பாலுக்கு ஜிஎஸ்டி இல்ல என பால்வளத்துறை அமைச்சருக்கு தெரியவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.