Categories
மாநில செய்திகள்

தஞ்சையில் விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து?…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

தஞ்சாவூர் மாநகரில் பழையபேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில், பொது மக்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து நேற்று மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணைமேயர் அஞ்சுகம் பூபதி, பகுதி செயலாளர் நீலகண்டன், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்தி போன்றோரிடம் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநி மாணிக்கம் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து  எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, தஞ்சையில் 2ஆம் உலகப்போரின்போது விமான போக்குவரத்து தளம் உருவாக்கப்பட்டது.

இங்கு இருந்து முன்னதாக பயணிகள் விமானப் போக்குவரத்து வசதிகளானது நடந்தது. அதன்பின் காலப் போக்கில் பயணிகள் விமானப் போக்குவரத்தானது நிறுத்தப்பட்டது. தஞ்சையில் விமானப் படை உருவாக்கப்பட்டது. ஏற்கெனவே விமான போக்குவரத்திற்கு சொந்தமாக 38 ஏக்கர் நிலம் அங்கு உள்ளது. தஞ்சையில் விமானப்படை தளத்திலுள்ள நிலப் பரிவர்த்தனை தொடர்பான நடைமுறைகள் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும். அதனை தொடர்ந்து விரைவில் தஞ்சையில் பயணிகள் விமானப் போக்குவரத்தை துவங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறும்.

 

Categories

Tech |