Categories
தேசிய செய்திகள்

“மணமகளுக்காக வந்த 11,000 ஆண்கள்”…. ஆனா விண்ணப்பித்ததோ 250 பெண்கள்….. விவசாயியை ரிஜெக்ட் செய்ததால் பரபரப்பு…..!!!!

மண்டியா மாவட்டத்தில் உள்ள ஆதி சுஞ்சனகிரி மடத்தில் உள்ள ஒல்லிகர் சமுதாய சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றது. இங்குள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்கள் தங்களுடைய பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்திருந்தனர். இதேபோன்று திருமண வயதில் இருக்கும் பெண்களும் தங்களுடைய பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 11,750 ஆண்கள் பதிவு செய்திருக்க, 250 பெண்கள் மட்டுமே பதிவு செய்திருந்தனர். இது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திருமணத்திற்கு பதிவு செய்திருந்த பெண்கள் அனைவரும் அரசு வேலை மற்றும் தனியார் வேலையில்நல்ல  உத்தியோகத்தில் இருக்கும் மாப்பிள்ளை வேண்டும் என்றும்,  விவசாயம் செய்யும் ஆண்கள் வேண்டாம் என்றும் கூறியிருந்தனர். ஆனால் பதிவு செய்திருந்த 11750 ஆண்களும் ‌ விவசாயம் தான் செய்கின்றனர். இதனால் விவசாயம் செய்யும் ஆண்கள் மிகவும் கவலைப்பட்டனர். அதோடு ஆண்களுக்கு இணையாக பெண்களின் எண்ணிக்கை இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் குறைந்த அளவிலான பெண்கள் இருக்கும் நிலையில் விவசாயம் செய்யும் ஆண்களை வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்வது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |