நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை மூலமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளின் நிதியும் ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. இந்நிலையில் ரேசன் கடைகளில் தேவையான பொருட்கள் இருந்தாலும் இருப்பு குறைவாக இருப்பதாக கூறி ஊழியர்கள் குறைவாக வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.
ரேசனில் உள்ள பொருட்களின் இருப்பு விவரங்களை அறிய PDS 101 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பலாம். கடை திறந்துள்ளதா என்பதை அறிய PDS 102 மற்றும் அதிக கட்டணம் வசூலித்தால் PDS 107 என்றும் டைப் செய்து SMS அனுப்பலாம்.