Categories
சினிமா தமிழ் சினிமா

“சர்தார்” வெற்றிகரமாக 25-வது நாள்… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி….!!!!

நடிகர் கார்த்தி சர்தார் திரைப்படத்தின் 25 ஆவது நாளையொட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனிக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார்.

மேலும் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர் தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் சென்ற அக்டோபர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.

சர்தார் 25வது நாள் : நன்றி சொல்லும் கார்த்தி Entertainment பொழுதுபோக்கு

இந்த நிலையில் சர்தார் படம் வெளியாகி நேற்றுடன் 25 நாட்களானது. இதற்கு கார்த்தி, “எனது அன்பான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் மதிப்புமிக்க இந்த வெற்றியை தந்ததற்கு மனதார நன்றி கூறுகின்றேன். 25-வது நாளில் மகிழ்ச்சியுடன் நுழைகின்றோம்” என எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். வரும் நவம்பர் 18ஆம் தேதி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |