ஹரியானா மாநிலத்தில் குருகிராம் என்ற பகுதியை சேர்ந்த குழந்தைகள் இல்லாத தம்பதியர் கோவில்களுக்கு சென்று அங்குள்ள கால்நடைகளுக்கு உணவிட்டு வந்துள்ளனர். அப்போது கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் நாய் இந்த நபரை பின்தொடர்ந்து வந்துள்ளது. அதனைக் கண்டு நாயை வளர்க்க முடிவு செய்த அந்த தம்பதியினர் இதற்கு சுவீட்டி என்று பெயரிட்டனர்.
இந்த நாய்க்கு தற்போது இந்து முறைப்படி திருமணம் செய்ய நினைத்து ஆண் நாய்யான ஷேருவை தேர்ந்தெடுத்து தன் உறவினர்கள் சுமார் 100 பேருக்கு அழைப்பிதழ் கொடுத்து இரண்டு நாய்க்கும் திருமணத்தை பிள்ளைகள் திருமணம் போல நடத்தியுள்ளனர்..