கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள்.
தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை கனமழை பெய்தது. இதன் காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் இரு கரைகளையும் தழுவிக் கொண்டு வெள்ளம் சீறிப்பாய்ந்து ஓடியது. இதனால் அப்பகுதியில் இருக்கும் ஜவஹர் நகர் பகுதியில் வெள்ளம் புகுந்தது.
இதன் காரணமாக அங்கு வசித்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். பின்னர் பூதிப்புரம் சாலையில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள். இதுபோலவே தேனி ஆற்றங்கரை தெரு, சுப்பன் தெருவில் கொட்டக்குடி ஆற்றின் கரையோரமாக வசித்த மக்களும் முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள். முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உணவு, பாய், போர்வை, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.