தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையினால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி உள்ளிட்ட பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன குறிப்பாக சீர்காழி பகுதியில் மட்டும் 122 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. இந்த நிலையில் கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் அப்பகுதிகளில் வெள்ள நீர் வடியாத நிலையில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (15.11.22 விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.