சென்னை பல்கலைகழகத்தில் துணை வேந்தர் தேடல் குழுவின் தலைவராக ஜெகதீஷ் குமாரை நியமித்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான கல்வியாளர்கள் தமிழகத்தில் இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது, சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேடல் குழுவின் தலைவராக தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை ஆளுனர் நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது. துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான கல்வியாளர்கள் தமிழகத்தில் இல்லையா?
2.சென்னை பல்கலைக்கழகத்திற்கு வெளிமாநிலத்தவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் தேடல் குழு தலைவராக ஜெகதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வெளிமாநில துணைவேந்தரை நியமித்ததால் அண்ணா பல்கலைக்கழகம் சீரழிவது போன்று சென்னை பல்கலை.யும் சீரழிந்து விடக்கூடாது!
— Dr S RAMADOSS (@drramadoss) March 5, 2020
சென்னை பல்கலைக்கழகத்திற்கு வெளிமாநிலத்தவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் தேடல் குழு தலைவராக ஜெகதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வெளிமாநில துணைவேந்தரை நியமித்ததால் அண்ணா பல்கலைக்கழகம் சீரழிவது போன்று சென்னை பல்கலை.யும் சீரழிந்து விடக்கூடாது!
தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் படிப்படியாக வெளிமாநிலத்தவரிடம் ஒப்படைக்கப்படுவது மிகவும் ஆபத்தானது. இந்த அணுகுமுறையை பல்கலைக்கழக வேந்தர் கைவிட வேண்டும். தமிழக அரசு இதை அனுமதிக்கக்கூடாது!” என்று குறிப்பிட்டுள்ளார்.