மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அயனாவரம் மேட்டு தெரு பகுதியில் தப்புசாமி-பவானி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு யுவஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் நேற்று பவானி தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக பவானியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பவானி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தப்பு சாமி மற்றும் அவரது மகள் மருத்துவமனைக்கு அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்துள்ளனர். மேலும் பவானியை பார்த்து கதறி அழுந்துள்ளனர். இந்நிலையில் திடீரென தப்பு சாமி மாயமாகிவிட்டார்.
இந்நிலையில் அவர்கள் பவானியின் உடலை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் உள்ள சமையலறையில் தப்பு சாமி தூக்கிட்டு தற்கொலை கொண்டது தெரிய வந்தது. இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.