லாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார்.
ஈரோடு மாவட்டத்திலிருந்து மக்காச்சோளம் லோடு ஏற்றிக்கொண்டு முத்தூர் நோக்கிய லாரி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விளக்கேத்தி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருக்கும் பள்ளத்தில் இரண்டு சக்கரங்களும் சிக்கி ஒரு புறமாக சாய்ந்தது.
மேலும் அப்பகுதியில் அடுத்தடுத்து இருந்த 5 மின்கம்பங்கள் உடைந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புதிய மின் கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். பின்னர் ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.