விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்திய பிரபலமானவர் ஷிவானி. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இவர் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி மனைவிகளில் ஒருவராக இணைந்து நடித்தார்.
இதனை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் மீண்டும் புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும், நடிகர் வடிவேலுவுடன் இணைந்து ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனயடுத்து, இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.
அந்த வகையில், தளபதி விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் இடம் பெற்றுள்ள ”ரஞ்சிதமே” பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பாடலுக்கு நடிகை ஷிவானி குத்தாட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
https://www.instagram.com/p/Ck7qfsvAJ2A/