திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. வழக்கமாக விடுமுறை நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
ஆனால் மழை பெய்யும் காரணத்தினால் பக்தர்கள் குறைந்த அளவிலேயே கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இதனையடுத்து சாலைகள் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர். தொடர்ந்து பெய்யும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.