ரேஷன் கடையை காட்டு யானைகள் உடைத்து அட்டகாசம் செய்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. இந்நிலையில் ஊசிமலை டாப் எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்த 3 காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து அட்டகாசம் செய்தது. இதனையடுத்து அங்கிருந்த அரிசியை தின்றும், சிதறியடித்தும் நாசம் செய்த காட்டு யானைகளை தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து விரட்டியடித்தனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.