கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்களான சிதானந்தம்(35), ராகேஷ்(28) ஆகிய இருவரும் காரில் சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை ராகேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.
இந்நிலையில் நண்டாங்கரை பகுதி மலைப்பாதை வளைவில் திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிதானந்தம், ராகேஷ் ஆகிய இருவரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.