ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்ததில் ஏமாற்றமே மிஞ்சியதாக ரஜினி வேதனை தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்புக்கு பின் 3ஆவது முறையாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதில் மாவட்ட செயலாளர்களுக்கு பல ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நடிகர் ரஜினி அதிர்ச்சியடைந்துள்ளார்.ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் சேர்க்கை நடத்துவதில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் செயலாளருக்கும் அதற்கான அறிவுறுத்தல் முன்கூட்டியே வழங்கப்பட்டும் மன்ற நிர்வாகிகள் அதை திருப்திகரமாக முடிக்கவில்லை.
குறிப்பாக சில மாவட்ட செயலாளர்கள் கடந்த ஓராண்டுக்கு முன்பே அதிக உறுப்பினர்கள் சேர்த்து, திருப்தியளிக்கும் செயல்பாடுகளால் ரஜினியால் பாராட்டபட்டனர். ஆனால் தற்போதைய ஆய்வில் சம்மந்தபட்டவர்கள் முழு வீச்சுடன் உறுப்பினர் சேர்க்கை நடத்தவில்லை .பதவிக்காக தங்களை முன்னிலைப் படுத்துவதற்காகவும் , தலைமையிடம் நெருக்கத்தை காட்டுவதற்காக மட்டுமே மாவட்ட செயலாளர்கள் செயல்படுகின்றனர். பதவி ஆசை , எம்எல்ஏ ஆகவேண்டும் என்ற ஆசையில் இருந்து வருகின்றனர்.
அதிகமாக உறுப்பினர் சேர்த்துள்ளதாக பாராட்டை பெற்ற மன்ற செயலாளர் கூட அதிக உறுப்பினர் சேர்க்கை நடத்தியதற்கான முகாந்திரத்தம் இல்லாதது ரஜினியை ஏமாற்றம் அடைய வைத்துள்ளதாக சொல்லப்பட்டுகின்றது.மக்கள் மன்ற நிர்வாகிகளில் இந்த செயல்பாடே நடிகர் ரஜினியை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. உறுப்பினர் பதிவை போலியாக பதிவிட்ட்தாகவும் சொல்லப்படுகின்றது. இதனால் தான் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ரஜினி தனக்கு ஏமாற்றமே , திருப்தி இல்லை என்ற அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிகின்றது.