வருண் தவான் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பாடல் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அமர் கௌஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் திரைப்படம் பெடியா. மேடாக் பிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படம் வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் “காடுன்னா தில்லு தானடா” பாடல் வெளியாகி இருக்கின்றது.
இப்பாடல் குறித்து இசையமைப்பாளர்கள் சச்சின்-ஜிகர் கூறியுள்ளதாவது, பழங்குடி இசையை அதன் உண்மை தன்மை மாறாமல் இப்பாடல் வாயிலாக இக்கால ரசிகர்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் பாடல் அமைந்திருக்கின்றது. இந்த பாடல் ரசிகர்களை கவரும் என நம்புவதாக கூறியுள்ளார். இப்பாடலை தமிழில் அமிதாப் பட்டாச்சாரியா எஸ்.சுனந்தன் எழுதியிருக்கின்றார்கள். மேலும் பாடலை தமிழில் பென்னி தயாள் பாடி இருக்கின்றார். இப்பாடல் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது.