இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. ஆனால் சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வீட்டு கடன் குறைந்த வட்டி வழங்கப்படும். நவம்பர் 14-ஆம் தேதி முதல் வீட்டுக் கடன் வட்டியானது 8.25% முதல் தொடங்குகிறது. அதன் பிறகு 0.25 சதவீதம் வரை வீட்டு கடனில் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வங்கியில் புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி வட்டியானது வழங்கப்படும். அதன் பிறகு மற்ற வங்கிகளில் இருந்து பேங்க் ஆப் பரோடா வங்கிகளுக்கு ட்ரான்ஸ்பர் செய்பவர்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படும். இவர்களுக்கு வட்டி சலுகையுடன் பிராசசிங் கட்டணத்தையும் தள்ளுபடி செய்வதாக வங்கி அறிவித்துள்ளது. இதன் காரணமாக வீட்டு கடன் வாங்குபவர்கள் நிறைய பணத்தை சேமிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இத சலுகையானது டிசம்பர் 31-ம் தேதி வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.