Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!…. ஆதார் கார்டு மூலம் அதிகரிக்கும் மோசடி…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான ஆதார் கார்டு அரசின் முக்கிய ஆவணமாக இருக்கிறது. அரசின் அனைத்து செயல்பாடுகளுக்குமே ஆதார் தேவைப்படுகிறது. ஆதார்எண் மட்டும் இருந்தால் ஒருவரை குறித்த அனைத்து விவரங்களும் எளிதாக தெரிந்துகொள்ள முடியும் அடிப்படையில், மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஆதார் கார்டை மற்றவர்கள் மோசடி செயல்களுக்கு பயன்டுத்துவது அதிகரித்து வருகிறது.

அதாவது நகலெடுக்கும் இடங்களிலும், ஆதார் பதிவிறக்கம் செய்யும் இடங்களிலும், நாம் வேறு தேவைகளுக்காக ஆதார் அட்டையின் நகலை கொடுக்கும் இடங்களிலுல் நமது ஆதார் எண் திருடப்பட்டு வருவது நடந்து வருகிறது. இதன் காரணமாக இனிமேல் பொது இடங்களில் ஆதாரை பதிவிறக்கம் செய்யும்போது மறைக்கப்பட்ட ஆதார் அட்டையை பயன்படுத்துமாறு மத்திய அரசு பொதுமக்களை எச்சரித்து இருக்கிறது.

Categories

Tech |