உத்திரபிரதேச மாநிலத்தில் இந்த மாதத்திற்கான ரேஷன் விநியோகம் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் வழங்கப்பட உள்ளது. ஆனால் பல ஊடகங்கள் தெரிவித்த செய்திகளின்படி அந்த மாநிலத்தின் பல மாவட்டங்களில் இந்திய உணவுக் கழகம் தரப்பிலிருந்து இன்னும் அரிசி விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ரேஷன் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோதுமை, சர்க்கரை, உப்பு உள்ளிட்டவை மட்டுமே பெரும்பாலான ரேஷன் ஒதுக்கிட்டு கடைகளுக்கு சென்றடைந்தது. ஆனால் அரிசி இன்னும் வரவில்லை. விரைவில் அரிசி வந்து சேரும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதன் பின்னரே ரேஷன் வழங்கும் பணி தொடங்கப்படும். நவம்பரில் அரிசி விநியோகம் இல்லாததால் வழங்கப்படவில்லை. விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இது போன்ற பிரச்சினை இதற்கு முன்னதாகவும் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக ரேஷன் அட்டைதாரர்கள் காத்திருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்திய உணவுக் கழகத்திடமிருந்து அரிசி வழங்குவதில் தாமதம் ஏற்படுவது ஏன் என்று குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. அரிசி வந்தவுடன் ரேஷன் விநியோகம் விரைவில் தொடங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.