நடிகை ராஷ்மிகாவை கன்னட ரசிகர்கள் கடுமையாக விளாசி வருகின்றார்கள்.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா, சீதாராமம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் முதலில் கன்னட திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அத்திரைப்படத்தை ரிஷப் செட்டி இயக்கி இருந்தார்.
அண்மையில் வெளியான காந்தாரா திரைப்படத்தையும் அவர் தான் இயக்கி இருந்தார். இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி வாகை சூட்டியுள்ளது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் ரஷ்மிகாவிடம் காந்தாரா திரைப்படத்தை பார்த்தீர்களா என கேட்டபோது இன்னும் பார்க்கவில்லை என பதிலளித்தார். இதனால் கன்னட ரசிகர்கள் அவரை இணையத்தில் விளாசி வருகின்றார்கள். இனிமேல் கன்னட திரைப்படத்தில் ராஷ்மிகா நடிக்க கூடாது எனவும் தங்களின் ஆதங்கத்தை இணையத்தில் கூறி வருகின்றார்கள்.