கனமழை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்ப்பகுதி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னையிலும் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரை, ஹைதராபாத் உள்ளிட்ட 8 இடங்களுக்கு செல்லக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.