இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது.
இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலு குறைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழக மற்றும் புதுச்சேரி கடற்கரையில் நிலவுகிறது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் இது கடந்து அரபிக் கடல் பகுதிகளில் செல்லக்கூடும். இதனால் நாளை முதல் தமிழகத்தில் மழை குறையும். ஆனால் வருகின்ற செவ்வாய்க்கிழமை வரை சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.