Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி!… பணத்திற்காக மனைவி என்று பாராமல்…. கணவர் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!

ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்திலுள்ள நார்லா பகுதியை சேர்ந்த கிரா பெருக் (25) என்பவர் சில நாட்களுக்கு முன்பு பூர்ணிமா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவ்வாறு திருமணம் நடந்ததும் கிரா பெருக் வேலை தேடி டெல்லி செல்வதாக மனைவியை அழைத்து சென்றுள்ளார். அங்கு வேறு ஒரு நபருக்கு, தன் மனைவி என்று பாராமல் பூர்ணிமாவை பணத்திற்காக கீரா பெருக் விற்றுள்ளார். இதையடுத்து அவரிடமிருந்து பெரும் தொகையை வாங்கிக்கொண்டு கீரா பெருக் சென்று விட்டார்.

அதன்பின் நவம்பர் 5ம் தேதி பூர்ணிமா தன் தந்தை குலமணிக்கு போன் செய்து நடந்த சம்பவம் தொடர்பாக கண்ணீர் மல்க கூறினார். உடனே பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கீரா பெருக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைச்சாலையில் அடைத்தனர். விற்கப்பட்ட பெண் தன் தந்தைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து நடந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.

Categories

Tech |