Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!…. தொடர் கனமழையால் முக்கிய சேவைகள் ரத்து…… தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கிறார்கள். கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக திருப்பதி தேவஸ்தான கோவில்களில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க படாத நிலையில் தொற்றின் தாக்கம் குறையவே படிப்படியாக சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதோடு டிக்கெட் முன்பதிவு வசதிகளும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் தரப்பிலிருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு முக்கிய சேவைகள் நிறுத்தப் பட்டுள்ளது. அதன்படி கார்த்திகை வனபோஜன சேவை, அர்ஜித பிரம்மோற்சவம், கல்யோணத்சவம், ஊஞ்சல் சேவை,‌ சகஸ்ர தீபாலன்கார‌ சேவை போன்றவைகள் நிறுத்தப் பட்டுள்ளது. ஆனால் 10 மணி முதல் 12 மணி வரை ஸ்னபன திருமஞ்சன சேவை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவஸ்தானத்தின் அறிவிப்பை பக்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |