ஜவஹர்லால் நேரு ஒரு புது இந்தியாவை உருவாக்கியவர் என அழைக்கப்படுவது என்பது தற்செயலானது அல்ல. ஏனெனில் மாநிலத்தின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியின் முக்கியமான கொள்கைகளை உருவாக்கிய பெருமை அவருக்கு இருந்தது. தேசிய பொருளாதாரத்தில் அரசு தீவிரமாக தலையிடவேண்டும் எனும் நிலைப்பாட்டை அவர் கடைப்பிடித்தார். நேருவின் தலைமையில் உருவாக்கப்பட்ட 5 ஆண்டு திட்டங்களின் அடிப்படையில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. அகிம்சைவழியில் நம் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய ஐ.என்.சி-யின் ஆர்வலர்களில் ஒருவராக நேரு இருந்தார்.
அத்துடன் நேரு, ஐஎன்சியின் மற்ற தலைவர்களைப் போலவே மகாத்மா காந்தியின் கோட்பாட்டை அறிவித்தார். காந்தியால் துவங்கப்பட்ட காலனித்துவ அதிகாரிகளுடன் ஒத்துழையாமை பிரச்சாரத்தில் நேரு தீவிரமாக கலந்துகொண்டார். ஆகஸ்ட் 24, 1946 அன்று நேரு இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தின் துணைப்பிரதமரானார். அதன்பின் நேரு இந்தியாவில் ஒரு “சோசலிச மாதிரி” சமுதாயத்தை உருவாக்குவதற்குரிய ஒரு பாடத்திட்டத்தை அறிவித்தார்.
இது பொருளாதாரத்தின் பொதுத்துறையின் வளர்ச்சி, சிறு வணிகத்திற்கான ஆதரவு மற்றும் ஒரு தேசிய சமூககாப்பீட்டு அமைப்பை உருவாக்கும் விருப்பம் போன்றவற்றில் முன்னுரிமை கவனம் செலுத்துவது ஆகும். இந்தியாவின் சுதந்திரம் மற்றும் போராட்டத்தில் ஜவஹர்லால் நேரு ஒரு வழிபாட்டுத் தலைவராகவும், நாட்டின் அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் ஒரு முக்கிய நபராகவும் விளங்கினார். இதற்கிடையில் குடும்பத்தில் மூத்த குழந்தையாக நேரு அலகாபாத்தில் வளர்ந்து வந்தார். கடந்த 1916ம் வருடத்தில் நேரு கமலா கவுல் என்ற இளம் அழகியை மணந்தார்.
ஒரு ஆண்டு கழித்து அவர்களின் ஒரே மகள் இந்திரா பிறந்தார். ஜவஹர்லால் அப்பெண்ணை உண்மையாக நேசித்தார். ஜவஹர்லால் நேரு தன் ஆரம்பக்கல்வியை வீட்டிலேயே பெற்றார். இங்கிலாந்தில், ஜவஹர்லால் ஜோ நேரு என அழைக்கப்பட்டார். 23 வயதில், அவர் கேம்பிரிட்ஜில் பட்டம் பெற்றார். அத்துடன் படிக்கும் போது சட்டம் பயின்றார்.
கிரேட் பிரிட்டனில் இருந்த போது, தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பிய மகாத்மா காந்தியின் செயல்பாடுகளில் ஜவஹர்லால் நேருவின் கவனம் ஈர்க்கப்பட்டது. எதிர் காலத்தில் மகாத்மாகாந்தி நேருவின் அரசியல் வழிகாட்டியாகவும், ஆசிரியராகவும் மாறினார். நேரு மே-27, 1964 அன்று டெல்லியில் மாரடைப்பு காரணமாக இறந்தார். மாஸ்கோ மாநில பல்கலைக்கழகத்துக்கு அருகே நேருவின் நினைவுச் சின்னம் இருக்கிறது.