தமிழ் சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நாயகியாக ஜொலிப்பவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் நடிகை திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். குந்தவை கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது த்ரிஷாவின் மார்க்கெட் ஓஹோ என்று உயர்ந்து விட்டது. தற்போது நடிகை திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும், நடிகர் அஜித்துக்கு ஜோடியாக ஒரு புதிய படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட த்ரிஷா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்றே சொல்லலாம். இந்நிலையில் நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள தேனாம்பேட்டையில் பல கோடி மதிப்புள்ள வீடு ஒன்றினை வைத்துள்ளார். அதன் பிறகு ஹைதராபாத்தில் 6 கோடி மதிப்புள்ள ஒரு பங்களா வீட்டையும் வைத்துள்ளாராம்.
இதனையடுத்து அவரிடம் இருக்கும் 3 சொகுசு கார்களின் விலை மற்றும் 6.55 கோடி ரூபாயாம். அதோடு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை வைத்திருப்பதாகவும், ஓய்வெடுப்பதற்காக வெளிநாடுகளுக்கு சுற்றுலாவுக்கு சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படி பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கும் த்ரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு 90 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. மேலும் ஒரு படத்தில் நடிப்பதற்கு திரிஷா 4 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம்.