Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவை தொடர்ந்து…. திருமண ஒளிபரப்பு உரிமையை ஓடிடி நிறுவனத்திற்கு விற்ற ஹன்சிகா?….. லீக்கான தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ஹன்சிகா மோத்வானி அறிமுகமானார். அதன் பிறகு நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, சிம்பு, உதயநிதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். நடிகை ஹன்சிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்‌.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள 450 வருடங்கள் பழமையான அரண்மனையில் வைத்து டிசம்பர் 4-ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற இருக்கிறது‌. நடிகை ஹன்சிகா மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் தன்னுடைய நீண்ட நாள் நண்பருமான சோகேல் கத்தூரிராவை திருமணம் செய்ய இருக்கிறார்‌.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா தன்னுடைய திருமண ஒளிபரப்பு உரிமையை பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு விற்று விட்டதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருமணத்தில் பல கட்டுப்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகை நயன்தாராவும் தன்னுடைய திருமண ஒளிபரப்பு உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |